வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாள்; வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது..
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று பின்னர், மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது..
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் K.S.ராகவேந்திரா, S.P.சிவலிங்கம், M.முத்துவேல் தமிழ்நாடு வ.உ.சி பேரவை தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ம்ற்றும் பெண்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை வெள்ளார் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கல்மேடு சிவலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.