பிரதமா் நரேந்திர மோடியின் பாராட்டுப் பெற்ற சலூன் கடைக்கு அண்ணாமலை நேரில் சென்று வாழ்த்து.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவா் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் 28/07/23 ராமேஸ்வரத்தில் தொடங்கி இன்று தூத்துக்குடி நடைபயணம் வந்துள்ள அண்ணாமலை நடைபயணம் முடித்த பின்னர் தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள பொன் மாரியம்மன் முடி திருத்தும் நிலையத்திற்கு சென்றார்.
பாரதப் பிரதமரின் மங்கிபாத் ரேடியோ நிகழ்வின் மூலம் முடி திருத்தும் நிலையத்தில் புத்தகம் வைத்து முடி திருத்தம் செய்ய வருபவா்களை வாசிக்க வைத்த சலூன் நூலகா் பொன்மாாியப்பன் பேசி வாழ்த்து தொிவித்தாா்.
அதன் தொடா்ச்சியாக 100 வது நாள் மங்கிபாத் ரேடியோ நிகழ்வுக்கு பிரதமா் அலுவலகம் மூலம் டெல்லிக்கு அழைத்து நினைவு பாிசு வழங்கினார் மேலும் தமிழக ஆளுனா் ரவி அழைத்து நினைவு பாிசு வழங்கினாா்.
பிரதமா் மோடியின் பாராட்டுப் பெற்ற சலூன் நூலகா் பொன்மாாியப்பன் கடைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவா் அண்ணாமலை இன்று தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள சலூன் நூலகத்திற்கு நேரில் சென்று பாராட்டினர். அண்ணாமலைக்கு பொன்மாாியப்பன் நினைவு பாிசாக புத்தகம் வழங்கினாா்.
பின்னர் அண்ணாமலை நூறு புத்தகம் தருவதாகவும் கடையில் அமா்ந்து முடி திருத்தம் செய்யும் நாற்காலிகள் வாங்க ரூபாய் 20 ஆயிரம் அன்பாக கொடுத்து வாழ்த்து தொிவித்தாா் . இந்த நிகழ்வின் போது சலூன் நூலகா் பொன்மாாியப்பன் மற்றும் அவரது மகன் அவரது தந்தை ஆகியோா் அண்ணாமலைக்கு நன்றி தொிவித்தனர்.