திருச்செந்தூர் அருகே உள்ள 1400 ஆண்டு பழமைவாய்ந்த நங்கைமொழி காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் வித்யா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருகே உள்ள நங்கைமொழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் வருகின்ற 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 12 மணிக்குள் வித்யா கணபதி ஹோமம் நடைபெறுகின்றது.
இந்த கோவில் 1400 ஆண்டுக்கு மேல் மிக பழமைவாய்ந்த ராகு கேது பரிகார திருத்தலம் ஆகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு இணையா ஸ்தலமாகும் இங்கு மாதம்தோறும் பிரதோசம் அன்று பிரதோச பூஜை மற்றும் பெளர்ணமி பூஜைகளும் நடைபெறுகின்றது. அதே போல் வருடம்தோறும் மஹாசிவராத்தி அன்று பிரதோச அறக்கட்டளையினர் மூலம் இரவு முழுவதும் நான்குகால பூஜைகள் வெகுசிறப்பாக நடத்தப்படுகின்றது.
வருடம்தோறும் வித்யா கணபதி ஹோமம் நடத்தப்படுகின்றது. வித்யா கணபதி ஹோமத்தில் அரசு தேர்வு எழுத இருக்கின்ற பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்தப்படுகின்றது. தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் தவறாது கலந்துகொண்டு பயன்பெறலாம் இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் பிரதோச அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.