தூத்துக்குடியில் மோடி சுட்ட வடை, திமுகவினர் விநியோகித்தனர்.

தூத்துக்குடியில் மோடி சுட்ட வடை, திமுகவினர் விநியோகித்தனர்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான முனைவர் டிஆர்பி. ராஜா அறிவுறுத்தலின் படி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனையின் பேரில்,

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி (பழைய) பேருந்து நிலைய வாயிலில் நேற்று (04.03.2024) மாலை கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் வாயால் வடை சுட்டு மக்களை வஞ்சிக்கும் மோடியின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் மற்றும் மோடி சுட்ட வடைகள் பயணிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

வட்டக் கழக செயலாளர் கதிரேசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் ஆகியோர் தலைமையில், மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அண்ணா நகர் பகுதிக் கழக செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகரப் பிரதிநிதி தயாள சுந்தர், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன், வட்டச் செயலாளர்கள் கங்கா ராஜேஷ், பாலு, மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, மகளிரணியைச் சேர்ந்த ரேவதி, வட்ட பிரதிநிதி சரவணன் மற்றும் அண்ணா நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் மார்க்கின் ராபர்ட், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் துரை, சண்முகபுரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் மனோ ராஜ், பிரையன்ட் நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனிஸ்வரன், வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்பன், உமா மகேஷ், செம்புலிங்கம், பரத், சக்தி, ரஞ்சித், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.