தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாணவ மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் சிறப்பு முகாம் - யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஒட்டப்பிடாரம் வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் சிறப்பு முகாம் ஒட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதார் பதிவு மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு ) கண்ணன் வட்டார கல்வி அலுவலர்கள் : சரஸ்வதி,பவனந்தீஸ்வரன் மகாலட்சுமி பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன்வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா ஒருங்கிணைப்பாளர் இராஜேஸ்வரி இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் மஞ்சுளா ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.