ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் யூனியன் சேர்மன் ரமேஷ்.

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் யூனியன் சேர்மன் ரமேஷ்.

மே 28 தூத்துக்குடி மாவட்டம் ஓட் டப்பிடாரம் அருகே தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து இறந்தவர் குடும்பத்துக்கு தமிழக மின்வாரியம் சார்பில் ₹5 லட்சத்திற்கான காசோலையை யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கி னார்.

ஓட்டப்பிடாரம் அடுத்த புது பச்சேரியைச் சேர்ந்த வர் கருப்புசாமி மகன் முத்துக்குமார் (41). இவர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி. பிரிவில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம்,ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரத்தில் உள்ளது. கடந்த 11ம் தேதி முத்துக்குமார் பருத்தி செடிகளுக்கு பூச் சிக்கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தின் வழியாக சென்ற மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக் காமல் முத்துக்குமார் மிதித் துள்ளார்.இதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத் திலேயே முத்துக்குமார் இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஓட்டப்பிடாரம் போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் உயிரிழந்த முத்துக் குமாரின் குடும்பத்தினரை சண்முகையா எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், மின்வா ரிய அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.அப்போது தங்களது குடும்பத் தினருக்கு மின்வாரியமும், அரசும் இழப்பீடு வழங்க வேண்டும் என முத்துக்கு மார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதுதொடர்பாக மின் வாரிய தலைமை பொறியாளர் டேவிட்ஜெப சிங், மேற்பார்வை பொறி யாளர் குருவம்மாள், செயற் பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து உள்ளிட்ட அதிகாரிகளின் வழிகாட் டுதலின்படி முத்துக்குமா ரின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் அவ ரது மனைவி முத்துச்செல் விக்கு மின்வாரியத்தின் ₹5 லட்சத்திற்கான நிதியுதவி காசோலையை நேற்று யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்.

அப்போது ஓட்டப் பிடாரம் மின்வாரிய உதவி பொறியாளர் மணிசேகர் மற்றும் அதிகாரிகள், பணி யாளர்கள், யூனியன் கவுன் சிலர் நவநீதகிருஷ்ணன். திமுக மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன், பொறியா ளர் அணி மணிகண்டன், தொண்டரணி கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.