மினிமராத்தான் போட்டி யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

மினிமராத்தான் போட்டி யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தை திருநாளை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே உள்ள உச்சிநத்தம் கிராமத்தில், கிராம பொதுமக்கள் மற்றும் பிரண்ட்ஸ் சர்வீஸ் கிளப் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவுகளாக மாபெரும் மினி மாராத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ஓடினர். பின்னர் இந்த மினி மராத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் வழங்கி பாராட்டுத்தெரிவித்தார்.