எப்போதும்வென்றான் சுற்று வட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்கள் அவதி.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் சுற்று வட்டார கிராம பகுதியான ஆதனூர் மிளகுநத்தம் காட்டுநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மின்சார வாரியம் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால் நோயாளிகள் குழந்தைகள் பொதுமக்கள் சிறு தொழில் செய்பவர்கள் என பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர் .
இதனை கருத்தில் கொண்டு மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.