தூத்துக்குடி ஓபிஎஸ் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன் உள்பட ஆதரவாளர் 25 நபர்கள் திருச்சிற்றம்பலம் தலைமையில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்.

தூத்துக்குடி அக் 27 அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையேற்றுஓபிஎஸ் அணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் கே.சரவணன், தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் 39 வது வார்டு வட்டச் செயலாளர் திருச்சிற்றம்பலம் தலைமையில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் ஓபிஎஸ் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சரவணன் உள்படபுருனோ, சாஹீர், அசாருதின், அஜ்ய், பரத்,

ரியாஸ், பவாஸ், மணி, கிரிஷ், பிரவீன், விஜய் உள்பட ஆதரவாளர் 25 நபர்கள் தூத்துக்குடி டூ வி புரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எஸ்பி சண்முகநாதனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மீண்டும் தாய் கழகமான அதிமுகாவில் தங்களை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், திருச்சிற்றம்பலம், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா ஆகியோர் உடன் இருந்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளரும் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் சிறப்பாக செய்திருந்தார்.