தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு என். டி. பி .எல் (சி எஸ் ஆர் ) பங்களிப்பில் ரூ 90.5 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் என் டி பி எல் சி எஸ் ஆர் பங்களிப்பில் பொது அறுவை சிகிச்சை துறைக்கு ரூ 5 லட்சம் (லேப்ரோஸ்கோபி கருவிகள்) எலும்பு முறிவு துறைக்கு ரூ 19 லட்சம் (எலும்பு துளையிடும் கருவி) 250 KVA டீசல் ஜெனரேட்டர் இரண்டு, ரூ 38.95 லட்சம் மின்சார பணிக்கு மதிப்பு 22.31 லட்சம் கட்டுமான பணிகள் ரூ 5.21 லட்சம் மதிப்பிலும் ரூ 90.47 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.எல்.சி தலைமை செயல் அதிகாரி ஆனந்த ராமானுஜம், புதிதாக 250 KVA டீசல் ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு இருக்கும் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிஎஸ்ஆர் நிதி மூலம் மேலே குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முடநீக்கியல் துறை தலைவர் பேராசிரியர் பாவலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, என்.எல்.சி. பொது மேலாளர் ராஜசேகரன், பொது மேலாளர் (மின்சாரம்) அஜித் சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி ரகுபதி, துணைப் பொது மேலாளர் (மின்சாரம்) நரசிம்மன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.