தூத்துக்குடி, ஸ்பிக் நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர் திறன் தினம்-போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,  ஸ்பிக் நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர் திறன் தினம்-போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

 ஸ்பிக் நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர் திறன் தினம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்கள் 

போதை போன்ற தவறான வழிகளில் இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக ஆதி திராவிட அணி மாவட்ட தலைவர் சி.பெருமாள், வழக்கறிஞர் செல்வம் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 நிகழ்ச்சியில் பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா, தனது முதுகில் 30.3 கிலோ எடையுள்ள பாரத்தை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 3 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் செய்து 366 சுற்றுகளை பெற்று உலக சாதனை படைத்தார். 

இதனை தொடர்ந்து, ஆர்யா உலக சாதனை பெற்றுள்ளதாக, கண்காணிப்பாளர்களான நோபெல் உலக சாதனை நிறுவனத்தின் மாநில தலைமை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தேசிய அமைப்பாளர் எம்.கே.பரத் குமார் அறிவித்தனர், இதனையடுத்து சாதனையாளர் ஆர்யாவுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை நோபெல் உலக சாதனை நிறுவனத்தினர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் வழங்கினர். 

உலக சாதனை படைத்த ஆர்யாவுக்கு சாரா கலைப் பள்ளி தாளாளர் ஷாநவாஸ், சைமன் இசைக்குழு இயக்குனர் கனகு மற்றும் சாதனையாளர் ஆர்யாவின் பெற்றோர் முத்துசாமி, ரேவதி, ஸ்கிப்பிங் பயிற்சியாளர் ஐயப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.