சமூக வலைத்தளங்களில் மகளிர் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க எஸ் பி பாலாஜி சரவணனிடம் துளசி டிரஸ்ட் தனலட்சுமி புகார் மனு!.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வாட் அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் எஸ்பியிடம் மனு அளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்கள் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.
இது குறித்து துளசி டிரஸ்ட் தனலெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் :-
நான் துளசி டிரஸ்ட் நடத்தி வருகிறேன். மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எங்கள் டிரஸ்ட் மூலம் ஆண்டு தோறும் மகளிர் தினம் கொண்டாடி வருகிறோம். அதோடு மட்டுமல்லாது ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் ஆண்டு தோறும் மகளிர் தினம் அதாவது ஆலை செயல்பட்டு கொண்டு இருக்கும் போது சரி, தற்போதும் சரி இந்த மகளிர் தினம் கொண்டாட பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கடந்த (07.03.2023) அன்று உலக மகளிர் தினமானது ஸ்டெர்லைட் ஆலையினால் ஸ்டெர்லைட் குடியிருப்போர் வளாகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 3500 பெண்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மகளிர் தின விழாவில் எனக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதோடு பத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த மகளிர் தினம் நிகழ்ச்சி குறித்து ஆலையின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் கருத்துக்களுக்கு ஏற்றார் போல், செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் பிடிக்கும். எங்களுக்கு இந்த ஆலை வேண்டும் என்று குறள் கொடுக்கிறோம். ஆனால் இந்த எதிர்ப்பாளர்கள் எங்கள் மீது தொடர்ந்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். பெண்களை போற்றும் இந்த நாட்டில் பெண்களை இழிவு படுத்தி, வேண்டுமென்றே அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியும், இந்த மகளிர் தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பதிலாக அனைவரும் விபசாரத்திற்கு செல்ல வேண்டியது தானே, என்று சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
“மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடமையை ஒடுக்குவோம்” என்பதற்கு ஏற்றார் போல், பெண்களை இழிவு படுத்தி பேசக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு சட்டதிட்டங்கள் வகுக்க பட்டு வருகிறது. இது போன்ற அருவருப்பான வார்த்தைகளை வாட்ஸ் அப், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்த கூடிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் நாங்கள் புகார் மனு அளித்தோம். அவர்களும் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். நடந்து முடிந்த மகளிர் தினத்தை அரசு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்படி இருக்கும் சூழலில் இப்படி இது போன்ற அவதூறு வார்த்தைகளை அதாவது பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துங்கள், அல்லது விபச்சாரம் செய்து பிழைப்பு நடத்துங்கள், இல்லையெனில் ஆதரவாளர்களுக்கு கை பாகையாக செயல்படுங்கள் என்று அருவருப்பான வார்த்தைகளை பேசிவருவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட 3500 பெண்களும் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை நாங்கள் எளிதில் விட போவதில்லை, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டோம் என கூறினார்.
இந்த புகார் மனு அளிக்கும்போது பல்வேறு அமைப்புகளை சார்ந்த மகளிர் அணியினர் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.