தமிழகத்தில் டிரிப்ல் சி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது கமிசன்,கரப்சன்,கலெக்ஷன் அது தான் இந்த விடியா திமுக ஆட்சி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு!.

ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சிலுவைப்பட்டியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர் ஏற்பாட்டில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன் , விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,கழக அமைப்பு செயலாளர் A.K சீனிவாசன் ஆகியோர் முன்னிலையல் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ;
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் நீட் தேர்வு ஒழிப்பு என்று கூறினார் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை 23 மாணவர்கள் இந்த அரசு காவு வாங்கி உள்ளது. ஸ்டாலின் நீட் தேர்வு ஒழிப்பேன் என்று கூறி பொய்யான வாக்குறுதியில் மக்கள் ஏமாந்த காரணத்தினால் ஏழரை நாட்டு சனி பிடித்துள்ளது இந்த சனி என்று ஒளிகிறதோ அன்றுதான் தமிழகத்துக்கு விடியல் வரும்.
அதிமுக என்றும் தொண்டர்களின் இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதனை போல் திமுகவினரால் சொல்ல முடியுமா கோட்டை கொத்தளத்தை குத்தகைக்கு எடுத்த ஒரே கட்சி திமுக தான்
கலைஞர் அதற்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அவருக்கு பிறகு இவரது மகன் இதுதான் திமுகவின் நிலை திமுகவில் இருப்பது அடிமைத்தனம் என்றார்.
சினிமாத்துறைக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக ரெட் சிக்னல் கொடுத்து விட்டனர் பாலைவனத்தில் கூட தண்ணீர் எடுத்துவிடலாம் ஆனால் திமுகவினரிடம் மக்கள் நலத்திட்டங்களை எதிர்பாக்க முடியாது இது தான் நிதர்சனமான உண்மை அரசு ஊழியர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை இந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கமிசன்,கரப்சன்,கலெக்ஷன் இது தான் இந்த ஆட்சி என்ற அவர் திராவிட மண்ணை, தமிழக மக்களை காக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த விடியா திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் வழங்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார்.
நிகழ்ச்சியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணப்பெருமாள் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஒட்டபிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி தூடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு இணைச்செயலாளர் கெளதம் பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்