சாலைகளின் இரு புறங்களிலும் மரங்கள்: எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம் முதல் 2-கி.மீ தூரம் வரை சாலைகளின் இரு புறங்களிலும் மரங்கள் நடப்பட்டு வருகின்றது.
சாலையின் இருபுறங்களில் மரங்கள் நடும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,மரங்கள் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன்,சிந்தலக்கரை சுப்புராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.