தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் கடைக்கு தீ வைத்த சம்பவம் - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் வெற்றி ராஜன் (65), இவர் பிரையன்ட் நகர் வியாபாரிகள் சங்க தலைவராக உள்ளார். மேலும் அங்கு பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மகாராஜன் (38) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் தேர்தலில் மீண்டும் வெற்றிராஜன் வெற்றி பெற்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மகராஜன் நேற்று அவரது கடைக்கு சென்று அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பேப்பர் அட்டைகளை தீ வைத்து எரித்தாராம். இதில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.
இந்த சம்பவம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது இந்த நிலையில் இன்று தூத்துக்குடி வருகை தந்த அவர் பிரையண்ட் நகர் 4 வது தெரு பகுதியில் தீயினால் சேதம் அடைந்தது கடையினை நேரில் பார்வையிட்டார் மேலும் கடையின் உரிமையாளரும் பிரையண்ட் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் வெற்றி ராஜனிடம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் D.சோலையப்பராஜா மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன் தெற்கு மாவட்ட செயலாளர் ராயல் கண்ணன் மகளிர் அணி ராஜம் மூன்றாவது மைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபாலன் செல்லத்துரை என்ற செல்வம் திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்கச் செயலாளர் மகேஸ்வரன் சிங் பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்கம் நல சங்கம் செயலாளர் சுகன்யா செந்தில் குமார் பொருளாளர் ராஜேஷ் துணைத் தலைவர்கள் கருணாநிதி முருகேசன் ரமேஷ் துணைச் செயலாளர்கள் கண்ணன் சரவணன் சிலுவைப் பிச்சை மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்