திருவைகுண்டம் மருதூர் குட்டைகால் குளத்தில் ரூ 75 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி நடைபெற்றது - சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவைகுண்டம் மருதூர் குட்டைகால் குளத்தில் ரூ 75 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி நடைபெற்றது - சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திருவைகுண்டம் தாலுகா மருதூர் மேலக்கால் பிரிவிற்குட்பட்ட குட்டைகால் குளத்தில் கரை பலப்படுத்துதல், மடை கட்டுதல், மையக சுவர் அமைத்தல் பணிகள் ரூ.75 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. சீரமைப்பு செய்யப்பட்ட பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சஞ்சய் விவசாய சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.