திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கும் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்.

திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில்  மீண்டும் இயக்கும் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்.

வாஞ்சி மணியாச்சி வழியாக இயக்கப்பட்டு வந்த திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில் 19-08-2024 முதல் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , சென்னை ரயில்வே பொது மேலாளர் மற்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகிய நான் ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

அம்மனுவில் 06-09-2024 க்குள் பயணிகள் ரயில் இயக்கவில்லை எனில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 5000 மேற்பட்ட மக்களை திரட்டி எனது தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் மனுவில் தெரிவித்தார்.

இன்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்

திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு எங்கள் பகுதி மக்களுக்கு கிடைத்த வெற்றி என சண்முகையா எம்எல்ஏ தெரிவித்தார்.

எனவே 06-09-2024 நடைபெறுவதாக இருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.