திருச்செந்தூரில் தைப் பூச திருவிழா: சுவாமி பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா!

தைப்பூச மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கபெருமாள் வந்த பின்பு சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமாளுக்கு சோடஷ தீபாராதனை நடைபெற்று திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. உள் மாடவீதி, மற்றும் வெளி ரதவீதி சுற்றி வந்து சன்னதித் தெருவழியாக திருக்கோவில் வந்துசேர்ந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தைப்பூச மண்டகப்படியினர் செய்து இருந்தனர்.