திருச்செந்தூர் அமலிநகர் மீனவர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை தோல்வி. போராட்டம் தொடரும்.
திருச்செந்தூர் அமலிநகர், ஜீவா நகரில் தூண்டில் பாலம் அமைக்க அரசு மானிய கோரிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ள ரூ 83 கோடியில் உடனடியாக தூண்டி பாலம் அமைக்க வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக. போராடி வருகின்றனர். இன்று காலை ஊர் மக்கள் 2500 பேர் கடற்கரையில் ஒன்றுகூடி கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
அதன் பின்னர் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அதிகாரிகள் வருகை தந்தனர். கடற்கரையில் உள்ள மீன் வலைக்கூடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று.
ஊர் சார்பில் பங்கு தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் ஊர் நல கமிட்டியினர், கூட்டுறவு சொஸைட்டியினர் மற்றும் ஊர் மக்கள் கூடியிருந்தனர். அரசு சார்பில் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், உதவி இயக்குநர் விஜயராஜன், டி.எஸ்.பி.வசந்தகுமார், செயற்பொறியாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அதிகாரி செல்வலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் மீனவ மக்கள் எங்களுக்கு தூண்டில் பாலம் அமைத்து தரும்வரை போராட்டம் நடத்துவோம், அரசுக்கு எங்களது அமைதியான போராட்டம் மூலம் தெரியப்படுத்துவோம் என உறுதியாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை சுமுகமான தீர்வு ஏற்படாததால் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசுகிறோம் என கூறி சென்றனர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.