தூத்துக்குடி பூ மார்க்கெட் வியாபாரிகள் மேயர் ஜெகன் பெரியசாமி சந்தித்து கோரிக்கை.

தூத்துக்குடி பூ மார்க்கெட் வியாபாரிகள் தங்கள் பகுதியில் ஆரம்பமாக இருக்கும் சாலை பணிகளை விரைந்து முடித்து தரவும் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து பேருந்துகள் மூலம் வரும் பூ மூடைகளை ஏற்றி இறக்கி கொண்டு சொல்வதற்கு ஏதுவாக குறிப்பிட்ட சில இரு சக்கர வாகனங்களை பேருந்து நிலையத்திற்குள் உள்ளே சொல்லுவதற்கு அனுமதி வழங்கிடவும் மேயர் ஜெகன் பெரியசாமி அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர் கோரிக்கையை விரைவில் முடித்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின்,முத்துவேல், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது மற்றும் வியாபாரிகள் உடன் இருந்தனர்.