தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அன்னை இந்திரா நகர் பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அன்னை இந்திரா நகர் பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அன்னை இந்திரா நகர் பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம் ஹவுசிங் போர்டு காலனி லெட்சுமி கார்டனில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார், பகுதி அவைத் தலைவரும் தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி வரவேற்புரையாற்றினார். 

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பேசுகையில் ;

மாநில வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் என எண்ணற்ற திட்டங் களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். 

திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திலும் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மக்களுக்கு திமுக ஆட்சியில் கிடைத்து வரும் நலத்திட்டங்கள், வேறு எந்த மாநிலத்திலும் கிடைத்ததில்லை. அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார், நாம் முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக கொண்டு சென்றால் முதலமைச்சரின் இலக்கான 200 தொகுதிகளை தான்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க., எளிதாக வெற்றியை பெற்று விடும் அதற்காக நமது இந்திரா நகர் பகுதி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேர்தல் களப்பணிகளை தொய்வின்றி நேர்த்தியாக செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.  

இக்கூட்டத்தில் ஒன்றிய ஆதி திராவிட நலக்குழு தலைவர் டிடிசி ராஜேந்திரன் செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வபெருமாள், பகுதி இளைஞரணி வேல்முருகன் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், இளைஞரணியினர், மகளிரணியினர், சார்பு அணி அமைப்பாளர்கள் அமைப்பாளர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.