தூத்துக்குடி வடக்கு ரதவீதி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா ஜெ.பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு மாபெரும் அன்னதானம் - முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி வடக்கு ரதவீதி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு பால்குடம், 10.30 மணிக்கு அலங்கார தீபராதரணையும் அபிஷேகம், நடைபெற்றது.
இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதனுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது அவரது தலைமையில் அன்னதான உணவுப் பொருள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அவருக்கு முதல் மரியாதையாக பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு 4000 பேருக்கு பிரமாண்ட அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக ஜெ.பேரவை இணைச் செயலாளர் 39 வது வார்டு வட்ட செயலாளர் கோயில் கமிட்டி பொருளாளருமான திருச்சிற்றம்பலம் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமை தாங்கி அன்னதான நிகழ்ச்சியை உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்.
இதில் 4 வகை கூட்டு பொறியல், பாயாசம், அப்பளம், வடை, சாம்பார், வத்தகுழம்பு, ரசம், மோர், தண்ணீர் பாட் டிலுடன் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதானத்தில் மக்கள் திரளாக பங்கேற்று உணவு உண்டு சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,டாக் ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டாக்டர் டைகர் சிவா,பிரபாகர், தன்ராஜ், முனியசாமி, வழக்கறிஞர் சரவணன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.