தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம்-திமுக மன்ற உறுப்பினர்கள் அதிமுக மாமன்ற உறுப்பினரை சட்டையை பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு!.
தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும் ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அதிமுக சார்பில் திமுக அரசு கொண்டுவந்துள்ள மதுபான திருத்த விதிகளை திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களில் மதுபான திருத்த விதி தொழிலாளர் வேலை சட்டம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கான மசோதாவை நிறைவேற்றியதையும் ரூபாய் 20 முத்திரை தாள் ரூபாய்100 ஆகவும் ரூபாய் 100 முத்திரை தாள் ரூபாய் 1000 ஆகவும் பத்து மடங்காக உயர்த்தியதையும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தூத்துக்குடி முறப்பநாடு அரசு ஊழியர் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் பணியின் போது வெட்டி படுகொலை செய்யப்பட்டதையும் தூத்துக்குடி மாநகர் முழுவதும் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கிகொண்டு வரும் டாஸ்மாக் பார்களை கண்டித்தும் தூத்துக்குடியில் அதிமுக சார்பாக கோடை கால தண்ணீர் பந்தல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகளை கண்டித்தும் அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி,வெற்றிச்செல்வன், மாமன்ற கூட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக மன்ற உறுப்பினர்கள் அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்தியை சட்டையை பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.