தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய முடிவு - ஒரு நாய்க்கு 700 ரூபாய் ஒதுக்கீடு.
தூத்துக்குடி மாநகராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும் ஆணையர் தினேஷ் குமார் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையிலும் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதன்படி தூத்துக்குடியில் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூபாய் 700 ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தும் விதமாக இதுவரை 2000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவி க்கப்பட்டது.மேலும் தற்பொழுது கூடுதலாக ' 490 நாய்களுக்கு கருத்தடை செய்யவும் இதற்காக ஒரு நாய்க்கு ரூபாய் 700 ஒதுக்கீடு செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கீழரதவீதி தொடர்ச்சியில் கட்டப்பட்டு வரும் கூட்டரங்கம் பணியானது விரைவில் நிறைவு பெறும் நிலையில் உள்ளது . கூட்டரங்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை முன்னிட்டு கூட்டரங்கத்தை ஏலம் ( ம ) ஒப்பந்தப்புள்ளி கோரும் நடவடிக்கையினை தவிர்த்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகை அடிப்படையில் ( நாள் வாடகை ) மற்றும் முன்பண வைப்புத் தொகை நிர்ணயம் செய்து மாநகராட்சி மூலம் முன்பதிவு மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்து துறை ரீதியாக கட்டணம் வசூல் செய்திடவும்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு தற்போது சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 58.67 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் நிலையில் பணி விரைவில் முடியும் தறுவாயில் உள்ளது . வருவாயை பெருக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை வாடகைக்கு விடுவது பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பாலகுருசாமி நிர்மல்ராஜ் கலைச்செல்வி அன்னலட்சுமி மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார்,நகர் நல அமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன், சரவணகுமார்,ராஜேந்திரன், பொன்னப்பன், முத்துவேல்,விஜயகுமார், கனகராஜ், கந்தசாமி , சரண்யா, அதிர்ஷ்ட மணி, சோமசுந்தரி, மகேஸ்வரி, வைதேகி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.