தூத்துக்குடி மாநகராட்சி 53,வது வார்டு பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி திடிர் ஆய்வு!.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி 53 வது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 53 வது வார்டு பகுதியான முனியசாமி கோயில் தெரு,மற்றும் பெரியார் நகர் புதியதாக நடைபெற்றது முடிந்த தார்சாலை பணிகளையும்
மேலும் முத்தையாபுரம் தோப்பு பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்காக நவீன முறையில் கழிப்பிடம் கட்டும் பணியனையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துவேல் 58 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பச்சிராஜ் மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.