கலைஞர் காப்பீட்டு திட்டத்தினால் விபத்தில் சிக்கி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கை கால்கள் செயல் இழந்த நிலையில் இருந்த இளைஞரை உயிருடன் மீட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு காப்பீட்டு திட்டத்தினால் விபத்தில் சிக்கிய இளைஞா் ஒருவா் காப்பாற்றப்பட்டாா் மைதீன் என்பவர் 15/6/2003 அன்று விபத்து ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்.
அவருக்கு கழுத்துப் பகுதியில் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் செயல் இழந்த நிலையில் இருந்தார். எம் ஆர் ஐ ஸ்பைன் பகுதி ஆய்வு செய்ததில் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது .அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் இருந்து வந்தார்.
அவரை பரிசோதித்த மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் குழு உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை உயிருடன் மீட்டனர்.
இந்த சிகிச்சையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இரண்டு கை மற்றும் இரண்டு கால் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சியும் அசைவும் பெற்றது.
பிசியோதெரபி பயிற்சியின் மூலமாக அவருக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதன் காரணமாக அவரது இரண்டு கைகள் அசைக்கவும் மெதுவாக நடைபயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார் .
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கணபதி வேல் ராமன் டாக்டர் ராஜா விக்னேஷ் டாக்டர் சொக்கையா ராஜா இவர்களை கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டினார்.
இதற்கு மயக்க மருந்து செலுத்தக்கூடிய ஒரு குழுவும் உறுதுணையாக இருந்தது துறைத்தலைவர் மனோரமா டாக்டர் பலராமகிருஷ்ணன் டாக்டர் சுமதி ஆகியோர் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்வதில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.