தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் -பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் -பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில் மாநகரத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்ட செயலாளர் முத்தரசு முன்மொழிந்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.;

01.01.2025 முதல் விலைவாசி உயர்வின் காரணமாக முடி திருத்தும் கட்டணங்களை உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கட்டண விபரம் 01.01.2025 முதல் Non A/C,A/C கட்டிங் சேவிங் 200,230 ,கட்டிங் மட்டும் 140,160 மாடல் கட்டிங் மட்டும் 150,170 சேவிங் மட்டும் 80,100 தாடி ஒதுக்குதல் 100,120 சிறுவர் கட்டிங் 120,130 கட்டிங், சேவிங், ஹேர்டை 350,300,400 கட்டிங், சேவிங், பேஷ்வாஷ் 250,350 தலை ஆயில் மசாஜ் 400,300 பேஷ் பிளிச் 500 மேற்கண்ட விலை பட்டியலில் உள்ள விலையை உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் நாராயணன்- மாவட்ட பொருளாளர் பால சரவணவேல் - மாநகர பொருளாளர் பண்டார பலவேச முத்து-மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாதுரை - மாவட்ட துணை தலைவர் கென்னடி-மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் - மாநகர துணை தலைவர் முத்துமணி - மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமல்ராஜ் - செயற்குழு உறுப்பினர் செயற்குழு உறுப்பினர்கள் ராமசெல்வம்,கோபால்,தங்கராஜ்,பாலசுப்பிரமணியன்,அசோக்குமார்தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

 கூட்டத்தின் இறுதியில் செயலாளர் முத்தரசு நன்றி கூறினார்.