தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்  132 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச்  சிலைக்கு மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் மில்லை தேவராஜ்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம்,மாநகரச் செயலாளர் உதயசூரியன்,தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மைக்கேல்,உட்பட  பலர் கலந்து கொண்டனர்.