தூத்துக்குடி திமுக முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமியின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள், மேயர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி திமுக முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமியின் 7 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள், மேயர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தவர் என்.பெரியசாமி. திமுக தலைவர் கருணாநிதியின் அன்பிற்கு பாத்திரமாக விளங்கியவர். கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கபட்டவர். தூத்துக்குடி நகர சபையின் தலைவராக, தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து மக்கள் பணியாற்றிவர். அவரது 7 ம் ஆண்டு நினைவு தினம் 26.05.24 அன்று அனுசரிக்கப்பட்டது. 

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் என்.பெரியசாமி குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்கண்டயன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராம ஜெயம், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலி பட்டி முருகேசன், சின்னபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், மேகநாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி மதியழகன், பொறியாளர் அணி அன்பழகன், மாவட்ட மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில் நுட்ப அணி அபிராமிநாதன், தொண்டர் அணி ரமேஷ், மகளிர் அணி கவிதா தேவி, மாணவரணி சீனிவாசன், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் இலக்கிய அணி ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அருன் குமார், தொழிலாளர் நல அணி முருக இசக்கி, ஆதிதிராவிடர் நல அணி சி.பெருமாள், பரமசிவன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மருத்துவர் மகிழ் ஜீவன், தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அருணா தேவி, ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் பெரியசாமி குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து அருகில் உள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.