தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தருவை மைதானத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தருவை மைதானத்தில்  மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் வி இ சாலை அரசமரப் பகுதியில் கொத்தனார் பணி செய்யும் மக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் 2 வது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இதனையடுத்து, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி, திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து உதய சூரியன் சின்னத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை தருவை மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இதில் துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர் ரெக்ஸலின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோட்டு ராஜா வட்டச் செயலாளர் பொன்ராஜ் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.