தூத்துக்குடி மாநகர திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது - தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு.

தூத்துக்குடி மாநகர திமுக செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது -  தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு.

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் திமுக செயற்குழு கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது 

கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் ;

தூத்துக்குடிக்கு 29 மற்றும் 30 தேதிகளில் வருகை தரும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பது குறித்தும், பூத் கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகர அவை தலைவர் ஜேசுதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் துறைமுகம் ப்ளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், சுரேஷ் குமார், மேகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், அணி நிர்வாகிகள் மற்றும் மாநகரத்திற்கு உட்பட்ட வட்டச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.