தூத்துக்குடி 44 வது வார்டு பகுதி சபா கூட்டம் - அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு.
தூத்துக்குடி,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் 15.09.24 அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதி 44 வது வார்டு பூங்காக்களில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பேசுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தின் போது எங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் சிறப்பாக செய்து கொடுத்தீர்கள், தற்போது 44வது வார்டில் வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்பட்டுள்ளதால் மழைநீர் விரைவாக வடிந்து விடுகிறது. சாலை வசதிகள் முழுமையாக போடப்பட்டுள்ளன, குடிநீருக்கும் தட்டுப்பாடு கிடையாது. அனைத்து தெருக்களிலும் தெரு விளக்குகள் சிறப்பாக பரமாரிக்கப் படுகிறது எனவே அமைச்சர் கீதாஜீவனை, இப்பகுதி மக்கள் சார்பில் மனதார பாராட்டுவதற்காக தெரிவித்தனர். மேலும் பிரையன்ட் நகர் 4 வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை வசதி செய்துதரவும், இப் பகுதியில் பயன்பாட்டில் இருந்த சாலையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் மற்றும் இந்த பூங்காவில் தேவையற்ற செடிகள், புதர்களை அகற்றி மேலும் சிறப்பாக பரமாரிக்க வேண்டும் என பொதுமக்கள், அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சிப் பணிகள் சீரான முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதி பொது மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் மகேந்திரன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி சபா உறுப்பினர்கள் சரவணன், சத்தியபாலன், செந்தில், திமுக வட்டச் செயலாளர்கள் சுப்பையா சிங்கராஜா மூக்கையா, செல்வராஜ் , தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, கவுன்சிலர் சரவணகுமார், பிரதிநிதி வெற்றிவேல் ராஜன், ரஜினி முருகன், முருகானந்தம் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.