சாலையோர வியாபாரிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு துணை நிற்கும் - மேயர் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அவர் பேசுகையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் மனரீதியாக புத்துணர்ச்சி பெறுவதற்கு விளையாட்டு திடல் மற்றும் சிறு சிறு பூங்காக்கள் அமைக்கப்படும்
மேலும் சாலையோர வியாபாரிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு எப்பொழுதும் துணை நிற்கும் எனவும்
மாநகராட்சி பகுதிகளில் 5,000த்திற்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு 10,000 முதல் 20,000 வரை கடனுதவி வழங்கப்பட்டது. வரும் காலங்களில் கடனுதவி மேலும் உயர்த்தி வழங்கப்படும் என்றும்
சாலையோர உணவகங்கள் வைத்திருக்கம் வியாபாரிகள் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கிடவும் சோதனைக்கு வரும் சுகாதார அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும்
மத்திய மாநில அரசுகளால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களின் ஒத்துழைப்போடு மாநகராட்சி பகுதிகளில் முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு பண பலன்களை பெறக்கூடிய வகையில் ஐந்து பயனாளிகளுக்கு ஆதி திராவிடர் நல வாரிய அட்டையாள அட்டையை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
மேலும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.