தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு ஐயப்ப நகர் பகுதியில் 5 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை பொது மக்கள் குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு ஐயப்ப நகர் 3 தெருவில் வசித்து வருகிறோம் எங்கள் பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக குடிநீர் வராமல் இருந்து வருகிறது.
இது குறித்து நாங்கள் பலமுறை கவுன்சிலரிடம் முறையிட்டும், எங்கள் பகுதியின் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அலுவலகம் இருக்கிறது நாங்கள் அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று பலமுறை புகார் தெரிவித்திருக்கிறோம்.
நாங்கள் புகார் தெரிவிக்கும் சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து tap inspector-ரை உடனடியாக போனில் தொடர்பு கொண்டு எங்களுடைய பிரச்சினைகளை சரி செய்யுமாறு கூறுவார்கள்.
அதன் பின்னர் மேற்படி விஷயத்தை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் நாங்கள் தண்ணீர் இல்லாமல் எங்கள் பகுதியில் ஐந்து ஆறு வீடுகள் மிகவும் கஷ்ட சூழலில் இருந்து வருகிறோம்.
மாநகராட்சிக்கு முறையான வரி உள்ளிட்டவை செலுத்தியும் தற்போது குடிநீருக்கு திண்டாடும் நிலையில் இருந்து வருகிறோம். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்குமா? அப்பகுதி மக்கள் எதிர் பார்த்து உள்ளனர்.
தெய்வானை.
9840840650