தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா பார்வையிட்டார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வாட்டுக்குட்பட்ட பண்டாரம்பட்டி முள்ளிகுளம், சுப்பிரமணியபுரம் 2-வது வார்டுக்குட்பட்ட ரஹ்மத் நகர்,ராம்நகர் , ஆதிபராசக்திநகர் மேற்கு மச்சாதுநகர் 3வது வார்டுக்குட்பட்ட ஹவுசிங் போர்டு,கே.டி.சி நகர், கே.டி.சி நகர் வடக்கு பகுதி மற்றும் ஓம்சாந்தி நகர் ஆகிய பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முனீர்அகமது உதவி ஆணையர் சுரேஷ்குமார் இளநிலைப் பொறியாளர் ராஜேஷ்கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோட்ராஜா மாவட்ட பிரதிநிதி பூவேஸ்நாதன் வட்டச் செயலாளர்கள் வழக்கறிஞர் கார்த்திக் ராஜன் செயலாளர்கள் கமாலுதின் குலாம் அலி மகளிரணி பௌசியா அபுதாகீர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.