தூத்துக்குடி பழையகாயல் பகுதியில் உள்ள உப்பளங்களில் மின்மோட்டாா் மின்வயா்கள் திருட்டு - உப்பு உற்பத்தியாளா்கள் நலச்சங்கம் வேதனை.

தூத்துக்குடி பழையகாயல்  பகுதியில் உள்ள உப்பளங்களில்  மின்மோட்டாா் மின்வயா்கள்  திருட்டு - உப்பு  உற்பத்தியாளா்கள் நலச்சங்கம் வேதனை.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் உப்பு உற்பத்தியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் ஆலோசனைக்கூட்டம் 15.06.2023 .வியாழன் மாலை 6 மணிக்கு பழையகாயலில் உள்ள வேபிரிட்ஜ் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் பழையகாயல் உப்பு உற்பத்தியாளா்கள் நலச்சங்க செயலாளா் ராயப்பன் தலைமையில் சங்கத்தின் பொருளாளா் வரதன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பழையகாயல் பகுதியில் உள்ள உப்பளங்களில் மின்மோட்டாா் மின்வயா்கள் அதிக மாக திருட்டு போகின்றது நழிவடைந்த தொழிலான உப்பளத் தொழிலை கஷ்டப்பட்டு நடத்தி வருகிறோம் எங்களது தொழிலுக்காக பயன்படுத்தப்படும் மின்மோட்டார் மின்வயர்களை சில கயவர்கள் திட்டம் தீட்டி களவாடி செல்கின்றனர் இந்த திருட்டின் மூலம் நாங்கள் தொழில் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறோம் இந்த தொழிலின் மூலம் நாங்களும் எங்களது தொழிலாளர் குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவே இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் இரவில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

கூட்டத்தில் மூன்று தீா்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன முதலாவதா உப்பளங்களில் இரவு நேரங்களில் காவல்துறையினா் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். காவல்துறையின் கோரிக்கையை ஏற்று உப்பளங்களில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தவும் உப்பளங்களில் மின் விளக்கு புதியதாக அமைக்கப்படும் என தீா்மாணங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.    

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழைய உப்பள உற்பத்தியாளர் நலச்சங்க உற்பத்தியாளர் பலா் கலந்து கொண்டனா்.