கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கோவில்பட்டி சுகாதார மாவட்டம் மூலம் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து.பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டையை வழங்கி பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வழிமுறைகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி வெறிநோய் தடுப்பு மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை பொதுமக்களுடன் இணைந்து எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மாவட்ட மருத்துவ அலுவலரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வட்டார மருத்துவ அலுவலர் அன்புமாலதி சிறப்பு மருத்துவ அலுவலர்கள் ஐஸ்வர்யா ரேவதி சரிதா நிவேதா நாகராஜன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி ஒன்றிய துணை செயலாளர் சிவன் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன்,மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கதுரை பாண்டியன் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஞானதுரை மாவட்ட மருத்துவ அணி தங்கவேல்சாமி ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து புதியம்புத்தூர் கிளை செயலாளர்கள் சற்குணபாண்டியன் பாலகுருசாமி ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன் கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள், செவிலியர்கள்,திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.