தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் - ஒசநூத்து - மணியாச்சி வழியாக பரிவல்லிகோட்டை இயக்கப்படும் பேருந்து தினசரி முறையாக இயக்க சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை பொதுமக்கள் மகிழ்ச்சி.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் - ஒசநூத்து - மணியாச்சி வழியாக பரிவல்லிகோட்டை  இயக்கப்படும் பேருந்து தினசரி முறையாக இயக்க சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை பொதுமக்கள் மகிழ்ச்சி.

தூத்துக்குடியில் இருந்து ஒட்டப்பிடாரம் - ஒசநூத்து - மணியாச்சி வழியாக பரிவல்லிகோட்டை இயக்கப்படும் பேருந்து தடம் எண் 105 பேருந்து தினசரி அனுமதிக்கப்பட்ட பேருந்து இயக்கப்படாமல் தினமும் ஒவ்வொரு பேருந்தாக இயக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இயக்கப்படும் பேருந்தானது அடிக்கடி பழுதடைந்து இடையில் நிற்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் இன்றைய தினம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முககையா அந்த வழித்தட பேருந்தில் ஏறி நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்தவாரே பணிமனை மேலாளரை தொடர்பு கொண்டு பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வண்ணம் செயல்படுமாறும் தினசரி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பேருந்தை இயக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.