புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி- சண்முகையா எம்எல்ஏ தமிழ்நாடு துணிநூல் துறை இயக்குனர் லலிதா ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டனர்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூரில் தயாரிக்கப்படும் ரெடிமேட் ஜவுளி ஆடைகளுக்கு உலகமெங்கும் தனிப்பெயர் உண்டு ரெடிமேட் ஜவுளி ஆடை உற்பத்தியில் புகழ்பெற்ற விளங்கியதால் புதியம்புத்தூருக்கு குட்டி ஜப்பான் என்ற பெயரும் உண்டு.இத்தகைய புகழ்பெற்ற புதியமுத்தூரில் வணிகர்களுக்கு ஏற்றவாறு ஜவுளி பூங்கா அமைத்துத் தர வேண்டும் என்பது புதியம்புத்தூர் ஜவுளி உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கை.
கடந்த கால ஆட்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா
கடந்த இரண்டு ஆண்டு காலமாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் மூலமாக கொடுக்கப்பட்ட மனுவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்று புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைத்துத் தந்து ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்களுக்கு உதவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் தொடர் நடவடிக்கையின் பலனாக புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைவது உறுதியாகியுள்ளது.அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதியம்புத்தூர் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தமிழ்நாடு துணிநூல் துறை இயக்குனர் லலிதா மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து தொடர்ந்து புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உகந்த இடத்தினை தேர்வு செய்வதற்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தமிழ்நாடு துணிநூல் துறை இயக்குனர் லலிதா மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தநிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,புதியம்புத்தூர் ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.