வீட்டை விட்டு வெளியே வந்து இரவில் சுற்றித் திரிந்த 16 வயது சிறுவனை பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த காவல்துறை - குவியும் பாராட்டு.!

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்து இரவில் சுற்றித் திரிந்தவனை பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாநகர இன்ஸ்பெக்டர், மெஞ்ஞானபுரம் சார்பு ஆய்வாளர் மற்றும் சிஐடி ஏட்டையா ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருநெல்வேலி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி நேற்று (21.07.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாளையங்கோட்டை பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சந்தேகத்திற்கிடமாக தனியாக சுற்றித்திரிந்தவர
ரை பிடித்து விசாரணை செய்ததில் அவன் தூத்துக்குடி மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் அவனது தந்தை திட்டியதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக தூத்துக்குடி மெஞ்ஞானபுரம் காவல் நிலைய சிஐடி போலீஸ் அந்தோணிகுமாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் உடனடியாக சிஐடி போலீஸ் அந்தோணிகுமார் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் விரைந்து செயல்பட்டு சிறுவன் மெஞ்ஞானபுரம் சிதம்பரம்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 11வது வகுப்பு படிக்கும் மாணவன் என்பதும், வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் என்பதையும் உறுதிப்படுத்திய பின்னர் சிறுவனை அவரது உறவினர் அழைத்துச் சென்றனர். உடனடியாக திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி அவர்களை அணுகி சிறுவனை பத்திரமாக மீட்டு சார்பு ஆய்வாளர் கணேசன, சி ஐ டி போலீஸ் அந்தோணிகுமார் ஆகியோர் சிறுவனது உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
வீட்டை விட்டுவிட்டு வெளியேறிய சிறுவனை பத்திரமாக மீட்டு எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்து துரிதமாக செயல்பட்டு சிறுவனை அவனது உறவினரிடம் ஒப்படைக்க உதவிய திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சார்பு ஆய்வாளர் கணேசன் மற்றும் சிஐடி போலீஸ். அந்தோணிகுமார் ஆகியோரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.