தூத்துக்குடி இரட்சண்யபுரத்தில் எம்.எல்.ஏ , எம்.பி தேர்தலை மிஞ்சும் அளவுக்கு விருவிறுப்பாக நடந்த ஆதிதிராவிட சமூக ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தல்.

தூத்துக்குடி இரட்சண்யபுரத்தில் எம்.எல்.ஏ , எம்.பி தேர்தலை மிஞ்சும் அளவுக்கு விருவிறுப்பாக நடந்த ஆதிதிராவிட சமூக ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தல்.

தூத்துக்குடி இரட்சண்யபுரத்தில் 65 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்ற ஆதிதிராவிட சமூக ஊழியர் சங்கம் தூத்துக்குடி வாழ் தலித் மக்களின் முதன்மை பெற்ற சங்கமாக புகழ் பெற்று வருகிறது. இந்த சங்கத்திற்கான நிர்வாக பொறுப்பாளர்களுக்கான  தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை நடைபெறும் என்று தேர்தலை நடத்தும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு இருந்தது‌. இதில் வேட்பு மனுத் தாக்கல், வேட்பு மனு வாபாஸ் மற்றும் வேட்பு மனு பரிசீலனை என அறிவிக்கப்பட்டு இதை போட்டியாளர்களாலும் கடைபிடிக்கப்பட்டது.

அதன் படி ஜேசன் ராஜா தலைமையில் ஓர் அணியும், முத்துராஜா மோத்தி தலைமையில் மற்றொரு அணியும் இந்த தேர்தலில் போட்டியிட்டது. மேலும் ஒவ்வொரு அணியிலும் 5 நபர்கள் தேர்தல் களத்தில் போட்டியாளராக இருந்தனர். இதனால் 1ம் நம்பர் ஓர் அணியாகவும், 5ம் நம்பர் மற்றொரு அணியாகவும் பிரித்து வாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் எம்.எல்.ஏ, எம்.பி தேர்தலைப் போலவே செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு இருந்ததால் அதன்படியே செயல்படுத்தப் பட்டது‌.

இந்த தேர்தலுக்கு டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளை நிர்வாக துணைச் செயலாளர் எம்.ஏ. ராஜன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்‌. இவருடன் மனோகரன்,  ஜெகதீசன், கோபால், ஜெயசீலன்,  கோகுல், யுவன் ராஜ், கோபி, தன்ராஜ், பிரபு, விக்னேஷ் ஆகியோர் தேர்தல் அதிகாரியின் தலைமையின் கீழ் இத் தேர்தலை வழி நடத்தினார்கள்.

மேலும் ஆதிதிராவிட சமூக ஊழியர் சங்க தேர்தலில் மாணிக்கபுரம், அம்பேத்கார் நகர், சோட்டையன் தோப்பு, பூப்பாண்டியபுரம், போல்டன் புரம், பூபாலராயர்புரம், குரூஸ்புரம் போன்ற பகுதியில் உள்ள உறுப்பினர்கள் காலை முதல் வாக்களிக்க வருகை தந்தனர்‌. வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தகவல்.  இதன் வெற்றியாளர்களை இரவு தேர்தல் அதிகாரி எம்.ஏ. ராஜன் முறைப்படி வெளியிடுவார் எனவும் எதிர்ப்பார்க்க படுகிறது‌.

இந்த தேர்தல் இரட்சண்யபுரம் பகுதியில் அமைதியாக நடந்தாலும் பார்ப்பவர்களும், கேட்பவர்களும் தேர்தல் நடைமுறையை பார்த்து பாராட்டி வருகின்றனர்‌.