தூத்துக்குடியில் உள்ள யூனியன் வங்கி நிர்வாகத்தின் முடிவினை மாற்ற வேண்டும் யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநகர தலைவர் முரளிதரன் கூறுகையில் ;
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பி எஸ் எல் சி எதிரில் அமைந்துள்ள யூனியன் வங்கி பிரதான கிளை சுமார் 25 ஆண்டுகளாக இந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது வங்கியின் அருகில் சிவன் கோவில் மசூதி தேவாலயம் அமையப்பெற்று உள்ளது தற்போது வங்கியின் கிளை ஒன்றிணைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தக் கிளையை வேறொரு கிளையோடு ஒன்று சேர்க்க யூனியன் வங்கி நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.
இந்த நிலையில் பல்வேறு குழு வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர் மேலும் சாமானிய மக்களும் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர் மேலும் பிரவீதியில் உள்ள மிகப் பழமையான தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என்ற பெருமையும் இந்த கிளையை சாரும் இந்த சூழலில் பிரதான கிளையானது வேறொரு இடத்தில் மாற்றம் செய்வதால் இங்கு கணக்கு வைத்துள்ளவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் ஆகவே பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கிளையை வேறொரு கிளையோடு இணைக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு இதே பகுதியில் இந்த கிளையை செயல்பட யூனியன் வங்கி நிர்வாகமானது அனுமதி அளிக்கப்பட வேண்டும் மாறாக கிளை மற்றும் முயற்சி தொடர்ந்தால் அடுத்தடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்..