சொத்து பிரச்சனைக்காக எப்போதும்வென்றானில் தம்பியை கொலை செய்த அண்ணன் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் கைது.
எப்போதும்வென்றான் தெற்கு தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்களான பொன்மாடசாமி (31) என்பவருக்கும் முத்துராஜ் (எ) முத்துகுட்டி (26) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று எப்போதும்வென்றான். அருகே உள்ள சோழபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துராஜ் (எ) முத்துகுட்டிக்கும் அங்கு வந்த பொன்மாடசாமிக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.பொன்மாடசாமி, முத்துராஜ் (எ) முத்துக்குட்டியை கம்பால் தாக்கியதில் முத்துக்குட்டி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) லோகேஸ்வரன் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளி பொன்மாடசாமியை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளி பொன்மாடசாமி மீது எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் 7 வழக்குகளும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.