டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் : சமக சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் : சமக சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காமராஜ் நகரிலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சாயாபுரம் தேரி ரோட்டில் உள்ள காமராஜ் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் போப் கல்லூரி, போப் பொறியியல் கல்லூரி, விகாஷா ஆங்கில மேல்நிலைபள்ளி, ஜெயா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள் தொழ்ற்சாலைகள் உள்ளன. 

அந்த டாஸ்மாக் வெளியூரிலிருந்து ரவுடிகளும், குண்டர்களும் வந்து மது கடைக்கு அருந்திவிட்டு அந்தவழியாக செல்கின்ற பொதுமக்களிடம் அடாவடித்தனம் பண்ணி பணம் பறித்து வருகின்றனர். அந்த வழியாக பெண்கள் செல்ல முடியவில்லை. இரவு 10 மணிக்குமேல் யாரும் செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் நடந்து வருகின்றன. மேலும் டாஸ்மாக் கடையிலிருந்து 100 அடி தூரத்தில் பெண்கள் கழிப்பறை உள்ளது. 

சில ரவுடிகள் மது அருந்திவிட்டு பெண்கள் கழிப்பறைக்கு சென்று கதவை தட்டி அங்கு இருக்கின்றவர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். 100 மீட்டா தொலைவில் நர்சரி உள்ளது. அங்கு அதிகமாக பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை.எனவே பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.