குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி,புதிய ரேசன் கடை, அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானத்துடன் கூடிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்து கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.பொதுமக்களின் கோரிக்கை சிலவற்றிற்கு அதிகாரிகள் தங்களது துறைச் சார்ந்த நடவடிக்கை குறித்து தகவல் தெரிவித்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில்: மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஏற்கனவே கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் பட்டா கேட்டு பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் சுமார்

2000 பேருக்கு கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைவில் பட்டா வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளனர். வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் புதிய ரேசன் கடை அமைத்து தர வேண்டுமென்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு எடுத்து சென்றதன் மூலம் வரும் நிதியாண்டில் சண்முகையா எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.13 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். அதே போல் கருப்பசாமி நகர், அழகாபுரி, வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் சமுதாய நலக்கூடமும் அமைத்து தரப்படும். புதிதாக 6 துணை ஆரம்ப சுகாதார நிலையம் 6 மாதத்தில் கட்டித்தரப்படும்.

பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றி தரப்படும். மாப்பிள்ளையூரணி மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பதால் அனைத்து வளர்ச்சி பணிகளுக்கு பொதுமக்களாகிய தாங்கள் துணை நிற்க வேண்டும், என்றார். மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிதாக விளையாட்டு மைதானம் பூங்காவுடன் அமைத்தல், கருவேல மரங்கள் முழுமையாக அகற்றுதல், சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மாடுகள் இறப்பிற்கு விசாரணை மூலம் தீர்வு காணுதல், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை சார்ந்த அதிகாரிகள் மீது கலெக்டரிடம் புகார் தெரிவித்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் ஊரகம், அனைவருக்கும் வீடு வழங்குவது குறித்து கணக்கெடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கான திட்டங்கள் சம்பந்தமாக 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் வில்சன், கால்நடை உதவி மருத்துவர் வினோத், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், தேசிய ஊரக வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் அங்காளஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்: மகேஸ்வரி காமராஜ், ஜீனத்பீவி, வசந்தகுமாரி, பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், உமா மகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், ராணி, கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன், ஏ.பி.சி.மகளிர் கல்லூரி மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகபிரியா, தூயமரியன்னை கல்லூரி விலங்கியல் துறை முனைவர் ஜெஸி டயஸ், பரிபூரணச்செல்வி, திமுக ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், அந்தோணி செல்வராஜ், ஆனந்த், ஜெயசீலன், மூர்த்தி, கௌதம், ஊர் நிர்வாகி சார்லஸ் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் கல்லூரி மாணவிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.