தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தவில்லை.. ஒரு சில வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை குறித்து நேரடி ஆய்வு மட்டுமே மேற்கொண்டனர்-வங்கியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் பேட்டி!.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தவில்லை.. ஒரு சில வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை குறித்து நேரடி ஆய்வு மட்டுமே மேற்கொண்டனர்-வங்கியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் பேட்டி!.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டம் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வங்கியின் முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக அதிகாரி மற்றும் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கூறுகையில்,

வங்கியின் நிகர லாபம் காலாண்டில் ரூபாய் 261 கோடியாக உள்ளது. கடன்கள் மூலம் கிடைக்கப்படும் வட்டி வருவாய் ரூபாய் 1,002 கோடியிலிருந்து ரூபாய் 1,156 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், இதர வருவாய் ரூபாய் 140 கோடியிலிருந்து 167 கோடியாக உயர்ந்துள்ளது. வாரா கடன் 1.69 சதவீதத்திலிருந்து 1.56 ஆக குறைந்துள்ளது என்றார்.

மேலும், வங்கியின் வைப்புத் தொகை 43 ஆயிரத்து 233 கோடியிலிருந்து ரூபாய் 47.008 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த காலாண்டில் ஆறு புதிய கிளைகள் துவங்கப்பட உள்ளதாக கூறிய அவர் சந்தை வணிகத்தை ஈர்க்க எம் எஸ் எம் இ கடன் செய்லாக்க மையம் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் துவங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வருமான வரித்துறை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரெய்டு நடத்தவில்லை.. அவர்கள் சர்வே அதாவது வருமான வரித்துறையினர் நேரடியாக வங்கிக்கு வந்து பண பரிவர்த்தனை குறித்த ஆய்வை மேற்கொண்டார்கள்.. ஒரு சில வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்தார்கள். இதில் வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் முழுமையாக களையப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பேட்டியின் போது, நிதி ஆலோசகர் பி.ஏ. கிருஷ்ணன், பொது மேலாளர்கள் சூரிய ராஜ், இன்பமணி, ரமேஷ், நாராயணன், ஜெயராமன், துணைப் பொது மேலாளர் அசோக் குமார், தலைமை மேலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.