தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவில் கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு மாணவ,மாணவியர்க்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன், திருமண்டல உப தலைவர் அருள்திரு.தமிழ்செல்வன், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மேனேஜர் பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ நிலவரக்குழு செயலர் அருள்திரு.இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல பொருளாளர் அருள்திரு.டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.