தூத்துக்குடியில் 11 வது தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளை தூத்துக்குடி தருவை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் 11 வது தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளை தூத்துக்குடி தருவை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு தேக்வாண்டோ அசோசியேஷன் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 11 வது தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் தருவை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தேக்வாண்டோ அசோசியேஷன் செயலாளர் ஜெயராம், தலைவர் குமாரவேல், பொருளாளர் பார்வதிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தேக்வாண்டோ தேசிய நடுவர் கு.இ.ராஜா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக 36 வது வட்ட திமுக செயலாளர் செல்வராஜ் வட்ட பிரதிநிதி டி.கே.எஸ். துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போ போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 265 வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. போட்டி பார்வையாளராக செயற்குழு உறுப்பினர் கென்னடி மணி ராஜ் பங்கு பெற்றார். போட்டி நடுவராக ஜோசப் ஜெஃப்ரி கலந்து கொண்டனர். தேக்வாண்டோ தேசிய நடுவர் கு.இ.ராஜா, மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.