தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஏற்பாட்டில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 100 வது பிறந்த நாள் விழா- மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு.
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.ரெங்கசாமி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழா 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமையிலும் ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன் முன்னிலையிலும் கலைஞரின் நூற்றாண்டு விழா பிறந்தநாள் கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் வேல்முருகன்,செல்வராஜ் KTC,சண்முகையா, செல்லையா,ராஜாமணி, பால்ராஜ்,சங்கரநயினார், வின்சென்ட், பெயிண்டர் ராஜசேகர், அண்ணா துரை,ராஜ்,ராஜா ,முத்துராஜ்,பால சுப்ரமணியன்,ஆறுமுகம், துரைராஜ், செல்வராஜ் EB,லிங்கசாமி,சேவியர், காளிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.