திருச்செந்தூரில் தியேட்டரில் சுகாதாரமற்ற வகையில் பராமரிக்கப்பட்ட கேண்டீனின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து.

திருச்செந்தூரில் தியேட்டரில் சுகாதாரமற்ற வகையில் பராமரிக்கப்பட்ட கேண்டீனின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து.

திருச்செந்தூரில் தியேட்டரில் சுகாதாரமற்ற வகையில் பராமரிக்கப்பட்ட கேண்டீனின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து செய்து, இயக்கம் நிறுத்தம்: மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் நடவடிக்கை.

அனைத்து திரையரங்குகளிலும் உள்ள கேண்டின்களில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் எச்சரிக்கை.

உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா,மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், ஆகியோரது வழிகாட்டுதலில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

திருச்செந்தூரில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா திரையரங்கில் உள்ள கேண்டீனில் வாங்கிய பாப்கார்னில் பூச்சிகள் இருந்ததாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பனுக்கு  செய்தியின்  வாயிலாக தகவல் பெறப்பெற்றதையடுத்து, திருச்செந்தூர் பகுதியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகனை புகார் குறித்து நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

அதனடிப்படையில் அலுவலர் ஆய்வு செய்த போது, பாப்கார்ன் தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து, பூச்சிகள் பாப்கார்னிற்குள் சென்றதிற்கு நேரடி சாட்சியங்கள் இல்லையெனினும், கேண்டீனில் சுகாதாரச் சீர்கேடு நுகர்வோரின் பொது சுகாதார நலனை பாதிக்கும் வகையில்  உள்ளது உறுதிபடுத்தப்பட்டது. எனவே, பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அக்கேண்டீனின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்ய தீரமானிக்கப்பட்டு, உடனடியாகக் கேண்டீனின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இப்புகார் தொடர்பாக புகார்தாரரிடமும், திரையரங்கு நிர்வாகத்திடமும் விரிவான விசாரணை நடத்தி, பாப்காரனில் பூச்சிகள் கிடந்தது குறித்து சான்றாவணங்களைத் திரட்டிய பின்னர், வழக்கு பதிவு செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையரங்கு கேண்டீனில் சுகாதாரத்தை மேம்படுத்தி, பாதுகாப்பான உணவுப் பொருட்களை உரிய லேபிள் விபரங்களுடன் நுகர்வோருக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட வணிகர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறினால், வணிகத்தை நிறுத்துதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், திரையரங்குகளில் உள்ள கேண்டீன் சுகாதாரமற்று உள்ளது என்றோ, தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவோ நுகர்வோர்கள் சந்தேகித்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது கால் யுவர் கலெக்டரின்  86808 00900 என்ற புகார் எண்ணிற்கோ புகார் அளிக்கலாம். தங்களது விபரம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார்.